கோத்தா பாரு: மலேசியாவுடனான தாய்லாந்து எல்லையில் உள்ள தாக் பாய் எனும் ஊர் ஒன்றில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்தின் தெற்கில் உள்ள நாராத்திவாட் மாநிலத்தில் தாக் பாய் அமைந்துள்ளது. புதன்கிழமை அன்று இரவு 10 மணி அளவில் குண்டுகள் வெடித்த சத்தம் அங்கு கேட்டது. மலேசிய எல்லையிலும் அந்த ஒலிகள் கேட்டன.
மேலும், அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததையும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் சமூக ஊடகக் காணொளிகள் காட்டின. தாய்லாந்து பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குண்டுவெடிப்பை உறுதி செய்தார்.
மோட்டார்சைக்கிளில் வந்த ஆறு பிரிவினைவாதிகள் தாக்கு தலை நடத்தியதாக தாய்லாந்தின் பிபிஎஸ் தொலைக்காட்சி கூறியது.
அதில் தாய்லாந்து ராணுவத்தார் மூவர் காயமடைந்தனர்.

