புதிய தேர்தல் வேண்டும்: இம்ரான் கான் எச்சரிக்கை

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தான் அர­சாங்­கம் இன்­னும் ஆறு நாள்­க­ளுக்­குள் புதிய பொதுத் தேர்­தலை அறி­விக்­கா­விட்­டால் அங்கு மேலும் பல பெரும் ஆர்ப்­பாட்­டங்­கள் நிக­ழும் என்று முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார்.

திரு கானும் அவரது ஆதர வாளர்கள் பல்லாயிரம் பேரும் கடந்த புதன்கிழமை தலைநகர் இஸ்லாபாத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் பேரணியாகச் சென்று இஸ்லாமாபாத் அடை வதைத் தடுக்க, நகரத்துக்குள் செல்லும் சாலைகளை அரசாங்கம் மூடியது. ஆனால் அவசரமாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரு கானும் அவரது ஆதரவாளர்களும் தலைநகருக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்தது.

நேற்று அதிகாலை தமது ஆதர வாளர்களிடம் பேசிய திரு கான், ஜூன் மாதத்தில் புதிய தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆறு நாள் கெடு விதித்தார். பிறகு தமது ஆதரவாளர்களைக் கலைந்து செல்ல சொன்னார்.

திரு கான்மீது கொண்டு வரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத் துக்கு ஆதரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் வாக்களித்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!