ஸ்டாக்ஹோல்ம்: குரங்கம்மை வழக்கமாகக் காணப்படாத நாடுகளில், அதன் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் இதைத் தெரிவித்தது.
கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு கூடியுள்ளது. கடந்த மே 20ஆம் தேதி ஒட்டுமொத்த குரங்கம்மைத் தொற்று எண்ணிக்கையை எண்ணத் தொடங்கியபோது 38 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. தற்போது மொத்தம் 219 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
குரங்கம்மை வழக்க மாக தொற்றாத 13க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றில் பெரும் பாலானவை ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
மேற்கு அல்லது மத்திய ஆப்ரிக்க நாடு களுடன் தொடர்புபடுத்த முடியாத தொற்று ஐரோப்பாவில் பரவி இருப்பது இதுவே முதல் முறை என்று நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.
தொற்றுக்கு ஆளான வர்கள் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இளம் ஆடவர்கள் என்று நிலையம் குறிப்பி ட்டது. குரங்கம்மை நோய் பாதிப்பு மிதமாக உள்ளது என்றும் இதுவரை மரணங் கள் நிகழவில்லை என்றும் நிலையம் கூறியது.
புதிய தொற்றுச் சம்பவங்கள் முதலில் பதிவான பிரிட்ட னில்தான் ஆக அதிகமான எண்ணிக்கை உள்ளது. அங்கு 71 பேருக்கு தொற்று உள்ளது.

