மகிந்தவிடம் புலனாய்வு துறை விசாரணை

மகிந்தவிடம் புலனாய்வு துறை விசாரணை

1 mins read
a511a087-4f88-4fd5-ab31-987d85162b21
-

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் அந்நாட்டு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி இருக்கிறது.

திரு ராஜபக்சேவிடம் புதன்கிழமை மாலையில் மூன்று மணி நேரத்துக்கு விசாரணை நடத்தப் பட்டதாகக் கூறப்பட்டது.

இலங்கையின் டெய்லி மிரர் செய்தி இணையத் தளம் இத்தகவலை வெளியிட்டது. கடந்த மே 9ஆம் தேதி காலி முகத் திடலில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது திரு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலின் தொடர்பில் விசாரணை நடைபெற்றது.

அன்று நடந்த வன்முறையின் தொடர்பில் 1,878 பேர் கைது செய்யப்பட்ட தாகவும் 831 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட தாகவும் இலங்கைக் காவல் துறை கூறியது. இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி ஷவேந்திரா சில்வா அந்நாட்டின் தலைமைத் தற்காப்பு தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தற்காப்புத் தளபதி விக்ரம் லியாங்கே ராணுவத் தலைமைத் தளபதியாக மாற்றப்படுவார்.