கனடாவில் பள்ளிகளுக்கருகே அருகே துப்பாக்கியுடன் சுற்றியவர் சுடப்பட்டார்

கனடாவில் பள்ளிகளுக்கருகே அருகே துப்பாக்கியுடன் சுற்றியவர் சுடப்பட்டார்

1 mins read
7731cd91-15ea-4c84-ae1f-d6c56410d613
படம்: ராய்ட்டர்ஸ் -

கனடாவின் டொராண்டோ நகரில் பள்ளிகள் இருக்கும் வட்டாரத்தில் துப்பாக்கியுடன் அலைந்துகொண்டிருந்தவரைக் காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர் 20 வயதுக்கு உட்பட்டவர் என்றும் அவர் கையில் ஒரு பெரிய துப்பாக்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மூன்று துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும், சுடப்பட்ட நபருக்கு அதிகாரிகள் முதலுதவி அளித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இச்சம்பவம் தனிப்பட்ட ஒன்று. இதனால் பதற்றம் தேவையில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இருப்பினும், அப்பகுதியில் காவல் துறை கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.

அமெரிக்காவில் இரண்டு நாள்களுக்கு முன் ஒரு பள்ளியில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 21 பேர் மாண்டதைத் தொடர்ந்து, கனடாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.