மாண்டரியல்: கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கியுடன் திரிந்த ஆடவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அங்கு பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
டெக்சஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டொராண்டோவில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியுடன் திரிவதாக போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த ஆடவர் பதின்ம வயது அல்லது 20 வயதுடையவராக இருப்பார் என்ற காவல்துறை யினர், அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும் கூறினர்.

