ஹாக்கி: 16 கோல்கள் போட்டு அசத்தியது இந்தியா

ஹாக்கி: 16 கோல்கள் போட்டு அசத்தியது இந்தியா

1 mins read
f3f26251-e472-4ab7-be6a-d14fa5776a67
-

ஜகார்த்தா: வெற்றி போதாது, அடுத்­தச் சுற்­றுக்கு முன்­னேற வேண்­டு­மென்­றால் 15 கோல்­கள் போட்­டாக வேண்­டும் என்ற கட்­டா­யத்­தில் ஆசி­யக் கிண்ண ஹாக்­கிப் போட்­டி­யில் கள­மி­றங்­கிய இந்­திய அணி 16 கோல்­கள் போட்டு இந்­தோ­னீ­சி­யா­வைப் புரட்டி எடுத்­தது.

ஆசிய கிண்ண ஹாக்கி போட்டி இந்­தோ­னீ­சி­யா­வின் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் நடந்து வரு­கிறது. இதில் 'ஏ' பிரி­வில் உள்ள இந்­திய அணி பாகிஸ்­தா­னு­டன் சம­நிலை, ஜப்­பா­னி­டம் தோல்வி என ஒரு புள்ளி மட்­டுமே பெற்­றி­ருந்­தது. இந்­நி­லை­யில் தனது கடைசி லீக் ஆட்­டத்­தில் நேற்று இந்­தோ­னீ­சி­யாவை எதிர்­கொண்­டது இந்­தியா.

இந்த ஆட்­டத்­தில் மிக அதி­க­மான கோல்­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றால் மட்­டுமே அடுத்­தச் சுற்­றுக்­குத் தகுதி பெற முடி­யும் என்ற நெருக்­க­டி­யான சூழ­லில் இந்­திய அணி கள­மி­றங்­கி­யது.

ஆட்­டத்­தின் முதல் பாதி­யில் 6-0 என முன்­னி­லை­யில் இருந்த இந்­திய அணி, அதற்கு பின்­னர் சூறா­வ­ளி­யாய் சுழன்­ற­டித்தது.

குறிப்­பாக திப்­சன் டிர்கி, அபா­ரன் சுதேவ் ஆகி­யோர் ஆட்­டத்தை தலை­கீ­ழாக மாற்­றி­னர். திப்­சன் டிர்கி 4 கோல்­கள் அடிக்க, சுதேவ் ஹாட்­ரிக் கோல் அடிக்க, செல்­வம், பவன், மூத்த வீரர் எஸ்.வி.சுனில் பிரேஸ் ஆளுக்­கொரு கோல் போட்டு அசத்­தி­னார்.

இத­னால் இந்­திய அணி இலக்­கை­விட ஒரு கோல் அதி­க­மாக போட்டு இந்­தோ­னீ­சி­யாவை 16-0 என்ற கோல் கணக்­கில் வீழ்த்தி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.