உண்மையான அன்பை எந்த வயதிலும் காணலாம், அதற்கு 95 வயது முதியவரின் இந்த கதை ஆதாரம். இங்கிலாந்தில் வசிக்கும் ஜூலியன் மொய்ல், தனது 95 வயதில் முதல் திருமணம் செய்து கொண்டார். ஆம், நீங்கள் படித்தது சரிதான்!
ஜூலியன் மொய்ல் (95), வலேரி வில்லியம்ஸ் (84) இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த அதே தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடி இந்த ஆண்டு இறுதியில் தங்கள் தேனிலவுக்கு ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவாலயத்தில் தனது மனைவி வலேரி வில்லியம்ஸை, 84, முதன்முதலில் சந்தித்தார். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் தனது காதலை அவரிடம் தெரியப்படுத்தி தன்னை மனந்துகொள்ளும்படி கோரியுள்ளார். வலேரியும் சம்மதம் தெரிவித்தார்.
மே 19ஆம் தேதி கார்டிஃபில் உள்ள அதே கல்வாரி பாப்டிஸ்ட் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்தில் 40 பேர் கலந்து கொண்டனர், அவர்களில் பெரும்பாலோர் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர்.

