‌ஷாங்காயில் தளர்வுகள்: மகிழ்ச்சியில் மக்கள்

‌ஷாங்காயில் தளர்வுகள்: மகிழ்ச்சியில் மக்கள்

1 mins read
69fc7f95-7009-432c-ac71-21cd05fc826a
-

‌ஷாங்­காய்: ‌ஷாங்­கா­யில் இரண்டு மாதங்­க­ளாக நீடித்த முடக்­க­நிலை கிட்­டத்­தட்ட தளர்த்­தப்­பட்­டு­விட்­டது. அதே­ச­ம­யம் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறைந்­தி­ருந்­தா­லும் பெய்­ஜிங்­கில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கடைப்­பி­டிக்­கப்­படு­கின்­றன.

ஜூன் 1ஆம் தேதி முதல் ‌ஷாங்­கா­யில் கட்­டுப்­பா­டு­கள் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வுள்­ளன. அதி­க­மா­னோர் தங்­கள் வீட்­டை­விட்டு வெளியே செல்ல அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. பல வர்த்­த­கங்­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளன.

இருப்­பி­னும் அதி­கா­ரி­கள் தொடர்ந்து கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­ய­வும், சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­ற­வும் அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். சாலையில் மகிழ்ச்சியாக பாடித் திரிந்த குழுவினரை போலிசார் வீட்டிற்குத் திரும்பக் கூறும் காணொளிகள் இணையத்தில் வலம் வருகின்றன.