இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். புதிய அரசு அமைந்தாலும் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து நடந்து வரும் போராட்டங்கள் 50வது நாளாக நேற்றும் தொடர்ந்தன.ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டக்களத்தில் உள்ள நூலகத்தில் புத்தகம் வாசிக்கும் போராட்டக்காரர். படம்: இபிஏ
கோத்தபாய போனால்தான் நாங்களும் போவோம்: விடாமல் போராடும் மக்கள்
1 mins read
-

