ஜப்பானின் செம்படை நிறுவனர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

ஜப்பானின் செம்படை நிறுவனர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

1 mins read
3cad1dee-5f21-4120-97c6-61a67e062e1f
தோக்கியோ சிறையிலிருந்து விடுதலையான ஃபுசாகோ தன்னை கைது செய்ததால், பலருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சொன்னார். படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: ஜப்­பா­னிய செம்­ப­டை­யின் நிறு­வ­ன­ரான 76 வயது ஃபுசாகோ ஷிகெ­னோபு தமது 20 ஆண்­டு­கால சிறை­வா­சத்­திற்­குப் பிறகு நேற்று விடு­த­லை­யா­னார்.

1972ஆம் ஆண்டு டெல் அவி­வின் லாட் விமான நிலை­யத்­தில் 26 பேர் கொல்­லப்­பட்ட கொடூ­ரத் தாக்­கு­த­லுக்கு ஃபுசாகோ மூளை­யாக செயல்­பட்­டார் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது. 1974ல் நெதர்­லாந்­தில் உள்ள பிரெஞ்சு தூத­ர­கத்தை செம்படையினர் மூவர் முற்­று­கை­யிட்­ட­து தொடர்பில் அவ­ருக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அப்போது அவர்கள், தூதரக அதிகாரிகளை 100 மணி நேரம் பிணை கைதியாக வைத்திருந்தனர்.