வெர்ஜினியா: அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தினரை நோக்கி சுடத் தொடங்கிய ஆடவரை, பெண் ஒருவர் தமது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
கடும் குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் டெனிஸ் பட்லர் எனும் அந்த 37 வயது ஆடவர், கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழுவைக் குறிவைத்தார்.
பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் மெதுவாக செல்லும்படி அங்கிருந்தவர்கள் அவரை எச்சரிந்திருந்தனர்.
அதன் பிறகு மீண்டும் துப்பாக்கியுடன் அந்த இடத்திற்குச் சென்றவர், தனது வாகனத்தில் இருந்தபடியே பிறந்தநாள் விழாவிற்காக கூடியிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கினார்.
அப்போது உடனடியாக செயல்பட்ட பெண்ணின் தைரியத்தால், பலரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை சொன்னது.
அப்பெண்ணைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.

