உக்ரேனுக்கு டென்மார்க்கின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்

உக்ரேனுக்கு டென்மார்க்கின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்

2 mins read
0c2c23bb-a6de-4e5c-af22-9d650e0d001f
-

கியவ்: ர‌ஷ்­யா­வுக்கு எதிரான தாக்குதலைப் பலப்­ப­டுத்­தும் வகை­யில் டென்­மார்க்­கின் கப்பல் எதிர்ப்பு ஏவு­க­ணை­களும் அமெ­ரிக்­கா­வின் தானி­யக்க ஹவிட்­சர் ஏவுகணைகளும் உக்­ரேனச் சென்றடைந்துள்ளன.

"பயிற்சி பெற்ற உக்­ரே­னிய குழுக்­கள் ஹார்­பூன் கப்பல் எதிர்ப்பு ஏவு­க­ணை­களைப் பயன்­ப­டுத்­து­வார்­கள். அதே சமயம் உக்­ரே­னின் கட­லோர தற்­காப்பு ஹார்­பூன் ஏவு­கணை­க­ளால் மட்­டும் பலப்­பட்­டு­விடாது," என்று அந்நாட்டின் தற்­காப்பு அமைச்­சர் ஓலெஸ்கி ரெஸ்­னி­கோவ் சொன்­னார்.

ஹார்­பூன் ஏவு­க­ணை­கள் கரை­யில் இருந்து கட­லில் உள்ள கப்­ப­லைத் தாக்கி அழிக்­கக்­கூ­டி­யது.

தெற்கு துறை­மு­க­மான ஒடேசா கட­லோர பகு­தி­யைப் பாது­காக்க உக்­ரே­னிய படையின் நெப்­டி­யூன் ஏவு­க­ணை­க­ளு­டன் ஹார்­பூன் ஏவு­க­ணை­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

ஒடேசா பகுதி ராணுவ நிர்­வா­க செய்­தித் தொடர்­பா­ளர் செர்ஹி, "பல ஹார்­பூன் ஏவு­க­ணை­கள் எங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்து ரஷ்­யா­வின் கருங்­க­டல் கடற்­படை மொத்­தத்­தை­யும் வீழ்த்­தி­வி­ட முடியும்," என்­றார்.

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்­வது ஆபத்­தா­னது என்று பிரான்­சை­யும் ஜெர்­ம­னி­யை­யும் ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எச்­ச­ரித்­துள்­ளார். அது வட்­டா­ரத்­தின் நிலைத்­தன்­மையை குலைக்­கக்­கூ­டும் என்­றார் புட்­டின்.

இரு நாட்­டுத் தலை­வர்­க­ளு­ட­னும் கிட்­டத்­தட்ட 80 நிமி­டங்­கள் புட்­டின் தொலை­பே­சி­யில் உரை­யா­டி­னார். மேலும் மேற்­கத்­திய நாடு­களின் தடை­க­ளால் உல­க­ளா­விய உணவு விநி­யோ­கத்­தில் ஏற்­பட்­டுள்ள இடை­யூ­று­கள் குறித்­தும் அப்­போது பேசப்­பட்­ட­தாக கிரெம்­ளின் அதி­பர் மாளிகை சொன்­னது.

அதே சம­யம், உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் ர‌ஷ்ய அதி­பர் புட்­டின் நேரடி, தீவிர பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­ப­ட­வேண்­டு­மென்று இரு­நாட்­டுத் தலை­வர்­களும் வலி­யு­றுத்­தி­ய­தாக ஜெர்­மா­னிய அதி­பர் அலு­வ­ல­கத்­தின் செய்­திக் குறிப்பு கூறு­கிறது.

உக்­ரே­னு­டன் மீண்­டும் பேச்­சு­வார்த்­தையை தொடங்க தயா­ராக உள்­ள­தாக ர‌ஷ்யா சொன்­னா­லும் ஸெலன்ஸ்கி, புட்­டின் இடை­யி­லான நேரடி பேச்­சு­வார்த்­தைக்­கான வாய்ப்பு குறித்து எது­வும் கூற­வில்லை.