குரங்கம்மைக்கு எதிராக உடனடியாக செயல்பட அழைப்பு

குரங்கம்மைக்கு எதிராக உடனடியாக செயல்பட அழைப்பு

1 mins read
ee4b531a-2f37-4c5f-86bb-b682b2103952
-

ஜெனிவா: குரங்கம்மைக்கு எதிராக உடனடியாக செயல்பட வேண்டும் என்று சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளின் நோய் நிபுணர்கள் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

குரங்கம்மை நோய் குறைந்தது 20 நாடுகளில் பரவியுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று உலக அரசாங்கங்களையும் உலக சுகாதார அமைப்பையும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அது கிருமிப் பரவுவதற்கான வாய்ப்பாக போய்விடும் என்கின்றனர் அவர்கள்.

கொவிட்-19 போல் குரங்கம்மை எளிதாக பரவக்கூடியதோ, ஆபத்தானோ இல்லை என்று கருதப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல் கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

மெக்சிகோவிலும் அயர் லாந்திலும் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.