ஹாங்காங் பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு

ஹாங்காங் பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு

1 mins read
bce787f6-cd4c-4f2c-97a9-d81f1e33398f
-

ஹாங்­காங்: பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யாக தளர்த்த தொடங்­கி­யுள்ள ஹாங்­காங், அங்கு செல்­லும் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கான கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் தளர்வை அறி­வித்­துள்­ளது.

ஹாங்­காங் புறப்­ப­டு­வ­தற்கு

48 மணி நேரத்­திற்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை செய்ய வேண்­டும் என்ற நடை­முறை தொடர்ந்து நடப்­பில் உள்­ளது என்­றா­லும் தொற்று இல்லை என்­ப­தற்­கான ஆய்­வ­கச் சான்­றி­தழ் அவ­சி­யம் இல்லை என்று ஹாங்­காங் அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

ஹாங்­காங் வழி­யாக செல்­லும் பய­ணி­கள் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்ய வேண்­டி­ய­தில்லை என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த மாற்­றங்­கள் வரும் 1ஆம் தேதி முதல் நடப்­புக்கு வரும்.

சீனா­வைத் தவிர பெரும்­பா­லான உலக நாடு­கள் தனது அனைத்­து­லக எல்­லை­யைத் திறந்து வரும் வேளை­யில், கிரு­மித்­தொற்­றைத் துடைத்­தொ­ழிக்­கும் கொள்­கை­யைப் பின்­பற்­று­வ­தில் உறு­தி­யாக இருந்த ஹாங்­காங், கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யி­லும் இந்தத் தளர்­வு­களைக் கொண்டு வந்துள்ளது.