'குரங்கம்மையால் உலக பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அபாயம்'

'குரங்கம்மையால் உலக பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அபாயம்'

1 mins read
bbefd803-5b50-4e7b-bac1-7045b1533c02
-

ஜெனிவா: உல­க­ள­வில் ஒட்­டு­மொத்த பொதுச் சுகா­தா­ரத்­திற்கு குரங்­கம்மை மித­மான அபா­யம் விடுப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

குரங்­கம்மை பொது­வாக கண்டறி­யப்­படாத நாடு­க­ளி­லும் அண்மையில் அது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து, உலக சுகா­தார நிறு­வனம் இவ்வாறு கூறி­யி­ருக்­கிறது.

"மனி­தர்­க­ளுக்கு இடையே பர­வக்­கூ­டிய ஆற்­ற­லைக் கிருமி பெற்று, சிறு­வ­ய­தி­னர், நோயெ­திர்ப்­பாற்­றல் குறை­வாக உள்­ளோ­ரைத் தொற்­றி­னால், பொதுச் சுகா­தார அபா­யம் அதி­க­மா­கக்­கூ­டும்," என்று அது கூறி­யது.

இந்த மாதம் 26ஆம் தேதி நில­வ­ரப்­படி, குரங்­கம்மை நிரந்­தர நோயாக இல்­லாத 23 நாடு­களில் 257 பேரி­டம் அது கண்­ட­றி­யப்­பட்டது. 120 பேரை குரங்­கம்மை தொற்­றி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. குரங்­கம்­மை­யால் இது­வரை உயி­ரி­ழப்பு ஏற்­பட்­ட­தா­கத் தக­வல் எது­வும் இல்லை.

குரங்­கம்மை நிரந்­தர நோயாக இருக்­கக்­கூ­டிய நாடு­க­ளி­லும் அது இல்­லாத நாடு­க­ளி­லும் கண்­காணிப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வேளை­யில், கூடு­த­லா­னோ­ரி­டம் அது கண்­ட­றி­யப்­படும் என்­பதை தான் எதிர்­பார்ப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யது.

தொற்­று­நோ­யான குரங்­கம்மை பொது­வாக லேசான அறி­கு­றி­களைக் கொண்­டது. மேற்கு, மத்திய ஆப்­பி­ரிக்­கா­வில் அது நிரந்­தர நோயாக உள்­ளது. குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுடன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு அது பர­வு­கிறது.

பிரிட்­டன், ஸ்பெ­யின், போர்ச்­சு­கல் போன்ற பல ஐரோப்­பிய நாடு­களில் குரங்­கம்மை இது­வரை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

"அண்­மை­யில் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்­டோர், அது நிரந்­தர நோயாக இருக்­கும் நாடு­க­ளுக்­குச் சென்று வந்­த­தா­கத் தக­வல் இல்லை," என்று சுகா­தார நிறு­வனம் சொன்­னது.