பேங்காக்: கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் கடந்த ஆண்டு சாதனை அளவாக ஒரு பில்லியன் 'மெத்தாம்பேட்டமைன்' மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றைக் கடத்தும் கும்பல்கள், கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலையும் ஆட்சிக்கவிழ்ப்பால் மியன்மாரில் ஏற்பட்ட அரசியல் நிலவரத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை தீவிரப்படுத்தின.
தென்கிழக்காசியாவில் 'தங்க முக்கோணம்' நீண்டகாலமாகவே போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போனதாக விளங்கி வந்து உள்ளது. மியன்மார், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக இல்லாததால், அந்த நாடுகளின் எல்லைகள் வழியாக சட்டவிரோத பொருள்கள் எளிதில் கடத்தப்படுகின்றன.
சட்ட அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 172 டன் போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததாக ஐ.நா. போதைப்பொருள், குற்றச்செயல் அலுவலகம் தெரிவித்தது.

