ஐபிஎல் கிண்ணத்துக்கு அடுத்ததாக பாண்டியாவுக்கு டி20 வெற்றி இலக்கு
புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் அணி, அதன் முதல் பருவத்திலேயே இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிண்ணத்தை வெல்வதற்கு வித்திட்ட அணித் தலைவர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்த இலக்கு, இந்தியாவுக்காக டி20 உலகக் கிண்ணப் போட்டியை வெல்வதே.
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், 2008ஆம் ஆண்டு வெற்றியாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது.
உங்களது அடுத்த இலக்கு என்னவென்று கேட்டதற்கு, "என்ன நடந்தாலும் சரி, இந்தியாவுக்காக உலகக் கிண்ணத்தை வெல்வதே," என்றார் பாண்டியா, 28.
"என்னால் முடிந்தவற்றை அணிக்காக நான் கொடுப்பேன். நாட்டைப் பிரதிநிதிப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என்னால் என் அணிக்கு பலன் கிடைப்பதை நான் உறுதிசெய்வேன்," என்றார் அவர்.
'கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு லிவர்பூல் ரசிகர்களே காரணம்'
பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து இறுதிப் போட்டியைக் காண செல்லுபடியாகக்கூடிய நுழைவுச்சீட்டுகளை வைத்திருக்காத லிவர்பூல் ரசிகர்களே கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குக் காரணம் என பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

