படகு விபத்து: 31 பேர் உயிருடன் மீட்பு, 11 பேரைக் காணவில்லை

படகு விபத்து: 31 பேர் உயிருடன் மீட்பு, 11 பேரைக் காணவில்லை

1 mins read
71492894-b9de-487a-9423-b2570bb3b61d
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் தெற்கு சுலா­வேசி மாநி­லத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை படகு மூழ்­கிய விபத்­தில் 31 பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் 11 பேரை இன்­னும் காண­வில்லை என்­றும் அதி­காரி ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

மீட்­கப்­பட்­ட­வர்­கள் வீடு திரும்பி­விட்­ட­தா­க­வும் அவர்­கள் நல்ல உடல்­நலத்தோடு இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

மக­சார் நீரி­ணை­யில் சென்­று­கொண்­டி­ருந்த அந்­தப் பட­கில் எரி­பொ­ருள் தீர்ந்­து­விட்­ட­தைத் தொடர்ந்து, மோச­மான வானிலை கார­ண­மாக அது மூழ்­கி­யது. உள்­ளூர் மீன­வர்­கள் பலர், பட­கில் மூழ்­கி­ய­வர்­களை இழு­வைப் பட­கு­களில் மீட்­ட­னர்.