ரியோ டி ஜெனிரோ: வடகிழக்கு பிரேசிலில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. அட்லாண்டிக் கரையோரத்தில் இரு பெரிய நகர்களில் பெய்த கனமழை அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி குறைந்தது 33 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 765 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.
பிரேசில் நிலச்சரிவு: மரணங்கள் அதிகரிப்பு
1 mins read
நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தீயணைப்பாளர்கள், குடியிருப்பாளர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

