நேப்பாள விமான விபத்து: விமானத்தில் இருந்த அனைவரும் மடிந்தனர்

நேப்பாள விமான விபத்து: விமானத்தில் இருந்த அனைவரும் மடிந்தனர்

1 mins read
42dd7b77-b4fd-4f6b-a4f6-120282630373
படங்கள்: ஏஃபி -
multi-img1 of 2

நேப்பாளத்தில் விபத்துக்குள்ளான விமான சிதைவுகளிலிருந்து 22 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேப்பாள விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்துள்ளது.

தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 16 நேப்பாளிகள், நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மானியர்கள் இருந்தனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான போக்காராவிலிருந்து விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

சிதைவுகளிலிருந்து குரல் பதிவு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நவீன விமானங்களில் இரண்டு கருப்புப் பெட்டிகள் இருக்கும். ஒன்று விமானத்தின் பயணப் பாதையைப் பதிவு செய்யும். மற்றொன்று விமானி அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் குரல் பதிவு பெட்டி மட்டும் இருந்தது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

விபத்து குறித்து விசாரிக்க ஐந்து பேர் குழுவை நேப்பாள அரசாங்கம் அமைத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நேப்பாளத்தில் பல விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.