முன்னாள் அரசதந்திரியும் வெலன்சியா காற்பந்துக் குழுவின் தலைவருமான அனில் மூர்த்தி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வெலன்சியா குழுவின் உரிமையாளரும் சிங்கப்பூர் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பீட்டர் லிம்மை தரக்குறைவாக விமர்சித்த ஒலிநாடா ஒன்றை ஸ்பானிய நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து அனில் மூர்த்திமீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஒலிநாடாவில் பீட்டர் லிம் பற்றி தரக்குறைவாகப் பேசியதோடு அல்லாமல் வெலன்சியா காற்பந்துக் குழுவிலுள்ள பிரபலமான விளையாட்டாளர்கள் குழுவிலிருந்து வெளியேற முயற்சி செய்தால் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடப் போவதாகவும் அனில் மூர்த்தி மிரட்டியிருந்ததாகக் கூறப்பட்டது.

