இலங்கை: பெட்­ரோ­லுக்­காக 12 மணி­நே­ரம் காத்­தி­ருப்பு

இலங்கை: பெட்­ரோ­லுக்­காக 12 மணி­நே­ரம் காத்­தி­ருப்பு

2 mins read
da513d14-a5e5-4d34-bf7f-21561d7b2d0d
கடும் சிரமத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கும் லசாந்தா தீப்தி. படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: லசாந்தா தீப்தி என்ற 43 வயது மாது தமது அன்­றாட வாழ்க்­கையை பெட்­ரோ­லுக்­காக காத்­தி­ருக்­கும் மக்­கள் வரி­சையை வைத்து திட்­ட­மி­டு­கி­றார்.

இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பு­வின் புற­ந­கர்ப் பகு­தி­யில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வரு­கி­றார்.

இத­னால், இவர் எப்­பொ­ழு­துமே தமது ஆட்டோ ரிக்‌ஷாவின் பெட்­ரோல் இருப்­பில் ஒரு கண் வைத்­தி­ருப்பார். அதி­லுள்ள இருப்பை வைத்தே இவர் அடுத்த சவா­ரியை ஏற்­றுக்­கொள்­வ­தும் ஏற்­றுக்­கொள்­ளா­த­தும் அமை­கிறது.

பெட்­ரோல் தீர்ந்­து­வி­டும் நிலை­யில் உள்­ளது என்று அதன் குறி­யீடு காட்­டும்­பொ­ழுது அவர் உடனே பெட்­ரோல் நிலை­யம் ஒன்­றில் வசிசை பிடித்து நிற்­பார்.

சில நேரங்­களில், பெட்­ரோல் நிரப்ப இரவு முழு­வ­தும் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­படும். அப்­ப­டிக் காத்­தி­ருந்து பெட்­ரோல் நிரப்­பி­னாலோ, அதற்காக எட்டு மாதங்­க­ளுக்கு முன் செல­வ­ழித்­த­தை­விட இரண்­டரை பங்கு அதி­க­மாக செலவு செய்ய வேண்­டி­யுள்­ளது. இவ­ரைப் போலவே, மில்­லி­யன் கணக்­கான மக்­கள் இலங்­கை­யில் திண்­டாட வேண்­டி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கட்­டுக்­க­டங்­கா­மல் உய­ரும் விலை­வாசி, குறை­யும் வரு­மா­னம், பெட்­ரோ­லில் இருந்து மருந்­துப் பொருள் வரை தட்­டுப்­பாடு என அந்­நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­பின் இது­போல் என்­றுமே இல்­லாத அள­வுக்கு மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கி உழல்­கிறது.

இலங்­கை­யில் ரிக்‌ஷா ஓட்­டு­நர்­க­ளைக் காண்­பது அரிது. ஆனால், ஐந்து நபர்­கள் கொண்ட தமது குடும்­பத்­தைக் காப்­பாற்ற இவர் ஏழு ஆண்­டு­க­ளாக ரிக்‌ஷாவையே நம்­பி­யி­ருக்­கி­றார். இதில் இவ­ருக்கு துணை­யாக இருப்­பது 'பிக்மி' என்ற உள்­ளூர் பயண செயலி. சவா­ரி­கள் குறைந்து வரு­வது ஒரு­பு­றம், பண­வீக்­கம் ஆண்­டுக்கு ஆண்டு 30 விழுக்­கா­டு­வரை உயர்ந்து வரு­வது மறு­பு­றம் என்ற நிலை­யில் இவர் தமது ரிக்­‌ஷா­வுக்குப் போது­மான பெட்­ரோ­லுக்­காக அலைய வேண்­டிய அவல நிலை உள்­ளது.

இவர் முன்பெல்லாம் மாதம் இலங்கை ரூபாய் 50,000வரை வருமானம் ஈட்டுவார்.

ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் அது பாதிக்கும் கீழ் குறைந்து விட்டதாக இவர் கூறுகிறார்.