காற்­பந்து செய்­தி­கள்

காற்­பந்து செய்­தி­கள்

2 mins read
c732e955-336d-4b2f-9f36-c770dac0331b
-

வெலன்­சியா காற்­பந்­துக் குழு­வின் தலை­வர் அனில் மூர்த்தி நீக்­கம்

சிங்­கப்­பூர்: முன்­னாள் அர­ச­தந்­தி­ரி­யும் வெலன்­சியா காற்­பந்­துக் குழு­வின் தலை­வ­ரு­மான அனில் மூர்த்தி அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார்.

வெலன்­சியா குழு­வின் உரி­மை­யா­ள­ரும் சிங்­கப்­பூர் பெரும் கோடீஸ்­வ­ரர்­களில் ஒரு­வ­ரு­மான திரு பீட்­டர் லிம்மை தரக்­கு­றை­வாக விமர்­சித்த ஒலி­நாடா ஒன்றை ஸ்பா­னிய நாட்டு செய்தி நிறு­வ­னம் வெளி­யிட்­ட­தைத் தொடர்ந்து அனில் மூர்த்­தி­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­தித் தக­வல்­கள் கூறு­கின்­றன.

அந்த ஒலி­நா­டா­வில் திரு பீட்­டர் லிம் பற்றி தரக்­கு­றை­வா­கப் பேசி­ய­தோடு அல்­லா­மல் வெலன்­சியா காற்­பந்­துக் குழு­வி­லுள்ள பிர­ப­ல­மான விளை­யாட்­டா­ளர்­கள் குழு­வி­லி­ருந்து வெளி­யேற முயற்சி செய்­தால் அவர்­களை ஒன்­று­மில்­லா­மல் செய்­து­வி­டப் போவ­தா­க­வும் அனில் மூர்த்தி மிரட்­டி­யி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இன்­டர் மிலா­னி­லி­ருந்து ஸ்பர்ஸ் செல்­லும் இவான் பெரி­சிச்

லண்­டன்: இத்­தா­லி­யின் இன்­டர் மிலான் காற்­பந்­துக் குழு­வுக்கு இது­நாள்­வரை விளை­யா­டிய இவான் பெரி­சிச் அடுத்த இரண்­டாண்­டு­க­ளுக்கு இங்­கி­லாந்­தின் டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழு­வுக்கு விளை­யாட உள்­ளார்.

இதற்­காக அவர் மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­ளும் பொருட்டு லண்­டன் சென்­றுள்­ள­தாக பிபிசி செய்­தித் தக­வல் கூறு­கிறது.

குரோ­வே­ஷிய நாட்டு காற்­பந்து வீர­ரான பெரி­சிச், இன்­டர் மிலான் குழு­வில் தற்­பொ­ழுது ஸ்பர்ஸ் குழு நிர்­வா­கி­யாக உள்ள அண்­டோ­னியோ கோன்­டே­யின் கீழ் விளை­யாடி 2020-2021 காற்­பந்­துப் பரு­வத்­தில் இத்­தா­லிய சிரி ஆ கிண்­ணத்தை வென்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தக் காற்­பந்­துப் பரு­வத்­தில் இன்­டர் மிலான் குழு­விற்­காக அவர் விளை­யா­டிய 49 ஆட்­டங்­களில் 10 கோல்­கள் போட்டு அந்­தக் குழு கோப்பா இத்­தா­லிய கிண்­ணத்தை வெல்ல உத­வி­யுள்­ளார்.

சாம்­பி­யன்ஸ் லீக் இறு­திப் போட்டி: குழப்­பத்தை விசா­ரிக்­கும் யூவேஃபா

பாரிஸ்: சாம்­பி­யன்ஸ் லீக் இறு­திப்­போட்­டி­யில் ரசி­கர்­க­ளி­டையே ஏற்­பட்ட குழப்­பம், அதைத் தொடர்ந்து போலி­சார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யால் போட்டி தாம­த­மா­கத் தொடங்­கி­யது. ரசி­கர்­கள் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு மைதா­னத்­திற்­குள் செல்ல முயன்­ற­தால் பிரஞ்சு போலி­சார் மிள­குத் தூள் கலந்த திர­வி­யத்தை பீய்ச்சி அடித்­த­னர். இது­பற்­றிக் கூறிய அதி­காரி ஒரு­வர் டிக்­கெட் விற்­ப­னை­யில் பெரிய அள­வில் மோசடி நிகழ்ந்­துள்­ள­தாகக் கூறி­னார்.

தற்­பொ­ழுது இது குறித்து விசா­ரிக்க முற்­பட்­டுள்­ளது யூவேஃபா என்ற ஐரோப்­பிய காற்­பந்து சங்­கம்.