நேப்­பாள விமான விபத்து: மாண்ட 22 பேரின் உடல்கள் மீட்பு

நேப்­பாள விமான விபத்து: மாண்ட 22 பேரின் உடல்கள் மீட்பு

1 mins read
9bc33168-3c7d-4029-890a-f7d606af9b37
-

காட்­மாண்டு: நேப்­பா­ளத்­தில் கடந்த ஞாயி­றன்று பொக்­கரா என்ற நக­ரி­லி­ருந்து கிளம்­பிய விமா­னம் பின்­னர் 15 நிமி­டங்­கள் கழித்து விபத்­துக்­குள்­ளா­னது. இதி­லி­ருந்த அனை­வ­ரும் மாண்ட நிலை­யில், பய­ணம் செய்த அனை­வ­ரின் உடல்­க­ளை­யும் மீட்­புக் குழு­வி­னர் கண்­டெ­டுத்­து­விட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது. அத்­து­டன், அந்த விமா­னத்­தின் குரல் பதிவு இயந்­தி­ர­மும் மீட்­கப்­பட்டு­விட்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது, 'டி ஹாவி­லாண்ட் கனடா டிஹெச்சி 6-300' ரக விமா­ன­மான அது நேப்­பா­ளத் தலை­ந­கர் காட்­மாண்­டு­வி­லி­ருந்து 125 கிலோ­மீட்­டர் மேற்கே உள்ள பொக்­கரா என்ற நக­ரி­

லி­ருந்து கிளம்­பிய 15 நிமி­டங்­களில் விபத்­துக்­குள்­ளா­னது.

அந்த விமா­னம் உல்­லா­சப் பய­ணம் மேள்­கொள்­ப­வர்­களும் புனித யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­களும் விரும்­பிப் போகும் ஜோம்­சம் நகர் நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­தது.

விபத்து நடந்த இடத்­தில் சித­றிய விமான பாகங்­கள் மட்­டுமே இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.