பெர்லின்: ஜெர்மனியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் (படம்) குறைந்தது மூவர் மாண்டதாகவும் 16 பேர் மோசமாக காயமடைந்ததாகவும் காவல்துறையினரும் உள்ளூர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சம்பவம் கார்மிஷ்-பார்ட்டன்கெர்க்கன் பகுதிக்கு அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
இதற்கிடையே, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று குவாங்ஸு நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் விபத்துக்கு உள்ளானது. ரயிலின் ஓட்டுநர் மாண்டார், எட்டு பேர் காயமடைந்தனர்.

