தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயைக் கொன்று துண்டுதுண்டாக வெட்டிய மகன்

1 mins read
7f82deb4-4ed8-4fa4-bfc7-9aeb8d125784
படம்: மலேசியா ஊடகம் -

மலேசியாவில் 15 மனித உடல் துண்டுகள் கழிவுநீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்பில் 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு குறித்து தன்னுடைய தாயை சந்தேக நபர் கொன்று துண்டுதுண்டாக வெட்டியதாகக் காவல் துறை தெரிவித்தது.

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் இந்தச் கோரச் சம்பவம் நடந்தது.

நேற்று மாலை சம்பவம் குறித்து காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது. சோதனை நடத்தியபோது, உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரேத பரிசோதனையில் உடல் பாகங்கள் ஒரு 68 வயது மாதுடையது என்று தெரியவந்தது.

இதனையடுத்து, மாதுவின் மகன் கைதுசெய்யப்பட்டார். ஓர் அரிவாள், இரண்டு கத்திகள், கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தன்னுடைய தந்தை தமக்கு விட்டுச்சென்ற சொத்து குறித்து சந்தேக நபருக்குத் திருப்தி இல்லாததால், அவர் தன்னுடைய தாயைக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.