இந்­தோ­னீ­சி­யா­வின் சிறப்பு ஐந்­தாண்டு விசா

ஜகார்த்தா: பாலி உள்­ளிட்ட பல பகு­தி­க­ளுக்கு மீண்­டும் பய­ணி­களை ஈர்க்க இந்­தோ­னீ­சியா, சிறப்பு ஐந்­தாண்டு விசாவை வழங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. அந்த விசா, வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­வர்­களுக்­கா­வும் வர்த்­த­கம் சார்ந்த பய­ணம் மேற்­கொள்­வோ­ருக்­கா­வும் உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

அத்­த­கை­யோர் சில­ரைக் கொண்டு கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்­த­படி வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தையே அதி­கம் விரும்­பு­வ­தா­க­வும் அதை­யொட்டி பய­ணம் மேற்­கொள்­ளத் தயா­ராய் இருப்­ப­தா­க­வும் அந்­நாட்­டின் சுற்­றுப்­ப­யண அமைச்­சர் சாண்­டி­யாகோ உனோ கூறி­னார்.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தின் தொலைக்­காட்சி ஒளி­வ­ழிக்கு அளித்த பேட்­டி­யில் அவர் இதைத் தெரி­வித்­தார்.

சென்ற ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்தே இந்த சிறப்பு விசாவை வழங்­கு­வது குறித்து இந்­தோ­னீ­சியா ஆலோ­சித்து வந்­தது. ஆனால் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அலை அவ்­வப்­போது தலை­தூக்­கி­ய­தால் அதற்­கான முயற்­சி­யில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­டன. இந்­தோ­னீ­சி­யா­வின் பிர­பல சுற்­றுலா தலங்­க­ளுக்­குப் போது­மான விமா­னச் சேவை­கள் இல்­லா­த­தும் ஒரு கார­ணம்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஆகப் பெரிய பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடான இந்­தோ­னீ­சியா, கொவிட்-19 தொடர்­பி­லான பெரும்­பா­லான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை விலக்­கி­விட்­டது. அதன்­படி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் அந்­நாட்­டுக்­குச் செல்ல பரி­சோ­தனை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை, தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­வும் வேண்­டாம்.

கடந்த ஏப்­ரல் மாதம் இந்­தோ­னீ­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை 500 விழுக்­காடு கூடி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!