தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயை துண்டாக வெட்டியதாக ஆட­வர் மீது சந்­தே­கம்

1 mins read
6026658e-88d9-48ee-9e9f-df85f4086acf
-

ஈப்போ: மலே­சி­யா­வில் 15 மனித உடல் துண்­டு­கள் கழி­வு­நீர்த் தொட்­டி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இதன் தொடர்­பில் 42 வயது ஆட­வர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.

சொத்து தக­ராறு குறித்து தன்­னு­டைய தாயை சந்­தேக நபர் கொன்று பல துண்­டு­க­ளாக வெட்­டி­ய­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

மலே­சி­யா­வின் பேராக் மாநி­லத்­தில் இந்­தக் கோரச் சம்­ப­வம் நிகழ்ந்­தது. நேற்று முன்­தி­னம் சம்­ப­வம் குறித்து காவல் துறைக்கு மாலை­யில் அழைப்பு வந்­தது. சோதனை நடத்­தி­ய­போது, உடல் பாகங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

பிரே­தப் பரி­சோ­த­னை­யில் உடல் பாகங்­கள் ஒரு 68 வயது மாதுக்­குச் சொந்­த­மா­னவை என்று தெரி­ய­வந்­தது.

இதைத் தொடர்ந்து மாதின் மகன் கைது­செய்­யப்­பட்­டார். ஓர் அரி­வாள், இரண்டு கத்­தி­கள், கொலை செய்­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட மற்ற பொருள்­கள் ஆகி­யவை கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

தனது தந்தை தனக்கு விட்­டுச்­சென்ற சொத்து குறித்து சந்­தேக நப­ருக்­குத் திருப்தி இல்­லா­த­தால், அவர் தாயைக் கொன்­ற­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.