தவறுதலாகத் தந்தையைச் சுட்டுக்கொன்ற குழந்தை

தவறுதலாகத் தந்தையைச் சுட்டுக்கொன்ற குழந்தை

1 mins read
8af33368-8faf-46f7-aab0-003f798600ab
-

மயாமி: அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­தில் ஓர் இரண்டு வயது பிள்ளை தனது தந்­தை­யைத் தவ­று­தலாகச் சுட்­டுக்­கொன்­றார். தோட்­டாக்­கள் இருந்த துப்­பாக்­கியை பிள்­ளை­யின் பெற்­றோர் கவ­னிப்­பின்றி விட்­டுச் சென்­ற­தால் அச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் வந்த பிறகு அவர்­கள் ஒர்­லாண்டோ நக­ருக்கு அருகே உள்ள வீட்­டிற்­குச் சென்­ற­னர். அப்­போது பிள்­ளை­யின் தாயான மரீ அயாலா தனது கண­வ­ருக்கு சுய நினை­வைக் கொண்டு வரும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்.

பிள்­ளை­யின் தந்­தை­யான 26 வயது ரெஜி மாப்ரி மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார். ஏற்­கெ­னவே சில குற்­றங்­க­ளைப் புரிந்த பிள்­ளை­யின் பெற்­றோர் நிபந்­தனை­க­ளு­டன் தற்­கா­லி­க­மாக சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­வர்­கள். குற்­ற­வா­ளி­யாக இருந்­த­போதே துப்­பாக்கி வைத்­தி­ருந்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்ட அயாலா தற்போது சிறை­யில் வைக்­கப்­பட்டுள்ளார்.