பிரசல்ஸ்: கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துலக எல்லைகள் தற்போது படிப்படியாக திறக்கப்படுகின்றன. இனி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் இருந்த ஐரோப்பியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தப் போராட்டங்களாலும் ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்கள் முடங்கியுள்ளன.
பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பள உயர்வு கேட்டு விமானத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் விமான நிலையங்களில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளன.
கூடுதல் சம்பளம் கேட்டு பாரிஸ் விமான நிலையத்துக்கு வெளியே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விமானத் துறை ஊழியர்கள்.
படம்: ஏஎஃப்பி