சீனாவில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை சில ஆடவர்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரை சரமாரியாக குத்தி உதைத்தனர்.
காரணம், தன்னிடம் அந்த நபர்கள் தவறான முறையில் நடந்துகொண்டதை அந்தப் பெண் சகித்துக்கொள்ளவில்லை.
அந்த மூன்று பெண்களை சில நபர்கள் அணுகி அவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அவர்களைத் தொட்டுப் பேசியதோடு தோளில் கை போடவும் முயன்றனர். அவர்களைத் தள்ளிவிட முயன்றபோது, ஒரு பெண்ணின் முகத்தில் விழுந்தது ஒரு குத்து. தோழியைக் காப்பாற்ற மற்றொரு பெண் அந்த ஆடவரின் தலையில் பீர் போத்தலை உடைத்தார். அதற்குப் பிறகு, வெடித்தது கைகலப்பு. மூன்று ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரை உணவகத்துக்கு வெளியே வைத்து அடித்து உதைத்தனர். தடுக்க முயன்றவர்களுக்கும் அடி விழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இந்தச் சம்பவம் சீனாவில் இணையவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலை முயற்சி என்று பலரும் கருத்துரைத்தனர்.
மூன்று சந்தேக நபர்களில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

