ஜப்பானிய அமைச்சர் கண்டனம்

ஜப்பானிய அமைச்சர் கண்டனம்

2 mins read
6d730d24-09f1-439e-b11d-17a958734c6f
-

சிங்­கப்­பூர்: அணு­வா­யு­தம் வைத்­தி­ருக்­கும் அண்டை நாடு­கள் அனைத்­து­லக விதி­மு­றை­க­ளைப் புறக்­க­ணிப்­ப­தாக ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்று பேசிய ஜப்­பா­னிய தற்­காப்பு அமைச்­சர் நோபுவோ கிஷி அதி­ருப்தி தெரி­வித்­தார்.

இதன் கார­ண­மாக ஜப்­பா­னுக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

"ஜப்­பா­னைச் சுற்றி உள்ள சில நாடு­கள் அணு­வா­யு­தங்­களை வைத்­துள்­ளன. சில நாடு­கள் அணு­வா­யு­தங்­க­ளைத் தயா­ரித்து வரு­கின்­றன. இந்த நாடு­கள் அனைத்­து­லக விதி­மு­றை­களை பகி­ரங்­க­மாக மீறு­கின்­றன," என்று திரு கிஷி சாடி­னார்.

கடந்த மாதம் ஜப்­பா­னுக்­கும் தைவா­னுக்­கும் மிக அரு­கில் உள்ள கடற்­ப­கு­தி­யில் சீனா­வும் ரஷ்­யா­வும் இணைந்து வான்­வ­ழிச் சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்­டன.

உக்­ரேன் மீது படை­யெடுத்த பிறகு ரஷ்யா இத்­த­கைய கூட்டு சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்­டது அதுவே முதல்­முறை.

"சீனா­வும் ரஷ்­யா­வும் ராணுவ பலம் கொண்ட நாடு­கள். அவை இணைந்து ராணுவ நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டும்­போது அண்டை நாடு­க­ளி­டையே பாது­காப்பு குறித்து அச்­சம் ஏற்­ப­டு­வது இயல்பு.

இன்று உக்­ரேன் மீது போர் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. நாளை கிழக்கு ஆசி­யா­வில் போர் வெடிக்­கக்­கூ­டும்," என அவர் கவலை தெரி­வித்­தார்.

தைவா­னின் பாது­காப்பு, நிலைத்­தன்மை ஜப்­பா­னுக்கு மட்­டு­மல்­லாது உலக நாடு­க­ளுக்­கும் மிக முக்­கி­ய­மா­னது என்று திரு கிஷி வலி­யு­றுத்­தி­னார்.

தற்­போது நில­வும் அமைதி நிலையை சீனா சீர்­கு­லைக்­கக்­கூ­டும் என்று அவர் கவலை தெரி­வித்­தார்.

தமது உரை­யின்­போது வட­

கொ­ரி­யா­வை­யும் திரு கிஷி கடு­மை­யாக விமர்­சித்­தார்.

இவ்­வாண்­டில் மட்­டும் வட­

கொ­ரியா குறைந்­தது 18 ஏவு­க­ணைச் சோத­னை­களை நடத்­தி­யுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

ஜப்­பா­னை­யும், கிழக்கு ஆசி­யா­வை­யும் உலக நாடு­க­ளை­யும் மிரட்ட வட­கொ­ரி­யா­வுக்கு வாய்ப்பு தரக்­கூ­டாது என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெ­றும் ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது.

இதில் உல­கெங்­கும் உள்ள உயர் ராணுவ அதி­கா­ரி­கள், அர­ச­தந்­தி­ரி­கள், ஆயு­தம் உற்­பத்­தி­யா­ளர்­கள் முத­லி­யோர் கலந்­து­கொண்­டுள்­ள­னர்.