கொவிட்-19 பரிசோதனை: தீவிரம் காட்டும் ஷாங்காய்

கொவிட்-19 பரிசோதனை: தீவிரம் காட்டும் ஷாங்காய்

1 mins read
566edeaf-d409-434c-aeab-55d3ac1066f9
ஷாங்காய் நகரில் உள்ள பெரும்பாலான வட்டாரங்களில் குடியிருப்பாளர்களுக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை நடத்தப்படும்போது வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று குறிப்பிட்ட சில வட்டாரங்களில் வசிப்பவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.படம்: இபிஏ -

ஷாங்­காய்: சீனா­வின் ஷாங்­காய் நக­ரில் மீண்­டும் ஒரே நேரத்­தில் பல­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. ஏறத்­தாழ 25 மில்­லி­யன் ஷாங்­காய்­வா­சி­க­ளுக்கு நேற்று பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

ஷாங்­கா­யில் உள்ள பிர­பல அழகு நிலை­யம் ஒன்­றுக்­குச் சென்ற சில­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வர அந்­ந­க­ரத்­தைச் சேர்ந்த சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தீவி­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஷாங்­கா­யில் உள்ள பெரும்­பா­லான வட்­டா­ரங்­களில் மக்­க­ளுக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பரி­சோ­தனை நடத்­தப்­ப­டும்­போது மக்­கள் தங்­கள் வீட்­டை­விட்டு வெளியே செல்­லக்­கூ­டாது என சில வட்­டா­ரங்­களில் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு மாதங்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த மிகக் கடு­மை­யான முடக்­கி­நிலை முடி­வுக்கு வந்து வெறும் பத்து நாள்­களில் ஷாங்­கா­யில் மீண்­டும் நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் 16 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக ஷாங்­காய் அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளில் ஆறு பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வட்­டா­ரங்­

க­ளுக்கு வெளியே வசிப்­ப­வர்­கள்.

இதற்கிடையே, தலைநகர் பெய்ஜிங்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.

மேலும் 61 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக பெய்ஜிங்கின் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.