முஷாரஃப் கவலைக்கிடம்

முஷாரஃப் கவலைக்கிடம்

1 mins read
ddfeff0e-239d-4798-96cc-8dfde9801964
-

துபாய்: துபாயில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக முஷாரஃப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும் அவர் மீண்டு வருவது சாத்தியமில்லை என்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூறியதாக நம்பப்படுகிறது.