தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்

1 mins read
2cb624c9-6f6e-477f-bee4-c7084f143678
-

ஒட்­டாவா: ஒவ்­வொரு சிக­ரெட்­டி­லும் எச்­ச­ரிக்கை வாச­கத்­தைப் பதிவு செய்ய கனடா நாட்­டின் அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது.

கனடா மக்­கள்­தொ­கை­யில் 13 விழுக்­காட்­டி­னர் நாள்­தோ­றும் புகைபி­டிப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­நாட்டு மக்­க­ளுக்­குப் புகைப்­பி­டிப்­ப­தால் ஏற்­படும் பாதிப்­பு­களை எடுத்­து­ரைக்­கும் வண்­ணம் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"புகை­யிலை தொடர்­பான பொருள்­களில் தனி­யாக இது­போன்ற சுகா­தார எச்­ச­ரிக்­கை­கள் மிக முக்­கி­ய­மான தக­வல்­களை மக்­க­ளி­டம் சென்று சேர்க்க உத­வும்.

புகைபி­டிக்க முற்­படும் இளை­ஞர்­கள், சிக­ரெட் பொட்­ட­லங்­களில் உள்ள எச்­ச­ரிக்கை வாச­கங்­களைப் புறக்­க­ணிக்­கின்­ற­னர்.

அதற்கு மாறாக சிக­ரெட்­டு­களில் எச்­ச­ரிக்கை வாச­கங்­கள் இருந்­தால் அவை அவர்­க­ளின் கண்­க­ளி­லி­ருந்து தப்­பாது.

"இந்­தப் பரிந்­து­ரையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து நாங்­கள் ஆராய்ந்து வரு­கி­றோம். 2023ஆம் ஆண்­டி­லி­ருந்து புதிய நடை­முறை செயல்­பாட்­டுக்கு வரும் என அரசு எதிர்­பார்க்­கிறது," என்று மன­ந­லம், போதைக்கு அடி­மை­யா­த­லைத் தடுக்­கும் துறைக்­கான அமைச்­சர் கரோ­லைன் பென்­னட் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.