டொரோண்டோ: பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், ஜஸ்டிஸ் உலக
சுற்றுலாவானது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது என்றும் தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். அவருக்கு ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும். இதனால், முக முடக்குவாதம் ஏற்
படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்கக்கூடிய ஆபத்து உள்ளது.
இருப்பினும், இப்பிரச்சினையி
லிருந்து தாம் மீண்டு வருவது உறுதி என்று அவர் மனந்தளராது தெரி
வித்தார்.
ஜஸ்டின் பீபருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படம்: ஜஸ்டின் பீபர்

