பெய்ஜிங்: சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்த பெண்ணை ஆடவர் ஒருவர் தகாத முறையில் தொட்டார்.
ஆத்திரம் அடைந்த அப்பெண் அந்த ஆடவரைத் தள்ளிவிட்டார்.
இதனையடுத்து, அந்த ஆடவரின் நண்பர்கள் அப்பெண்ணை தரதரவென வெளியே இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கினர்.
அப்பெண்ணுடன் இருந்த இன்னொரு பெண்ணும் தாக்கப்பட்டார்.
அப்பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கண்காணிப்பு கேமராவில் தாக்குதல் பதிவானது. அந்தக் காணொளி சமூக வலைத்
தளங்களில் தீயைப் போல் மிக வேகமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து சீனக் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து எட்டு பேரைக் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

