கப்பலோடு ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் மூழ்கின

கப்பலோடு ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் மூழ்கின

1 mins read
c43bb231-e2a5-4e27-81be-dbd979171ef6
படம்: ஏஃபி -

ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் அடைக்கப்பட்ட ஒரு கப்பல் சூடானின் செங்கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் வேலைபார்த்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கப்பல் சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

கப்பலில் 15,800 ஆடுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை கப்பல் ஏற்றிச்செல்லக்கூடிய சுமை அளவைத் தாண்டியதாகக் கூறப்பட்டது. அனைத்து ஆடுகளும் கடலில் மூழ்கின.

இந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான ஆடுகள் மூழ்கியிருப்பதால் செங்கடலில் கட்டாயம் மாசு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.