சீன-ஆஸ்திரேலிய அமைச்சர்கள் முதல் முறையாக நேரில் சந்திப்பு

சிங்கப்பூர்: ஆஸ்திரேலிய, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கிய முன் னேற்றப்படி என வருணிக்கப் படுகிறது.

"வெளிப்படையான முழுமையான கருத்து பரிமாற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவின் அக்கறைக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி யிருந்தேன்," என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார்.

இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி னார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா மாநாட்டையொட்டி மார்ல்சும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியும் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கலந்துரையாடினர்.

தற்போதையக் காலக்கட்டத்தில் வெளிப்படையாக உரையாடுவது முக்கியம் என்று துணைப் பிரதமரு மான திரு மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

"ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. அதற்கு நேரில் சந்தித்து பேசுவதே நல்லது" என்றும் அவர் சொன்னார்.

ஆனால் இந்தச் சந்திப்பு பற்றி சீன அரசாங்கமோ ஜெனரல் வெய்யோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டுபிடிக்க தன்னிச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தினார்.

இது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவில் '5ஜி' கட்டமைப்பை உருவாக்க சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்யுக்கு தடை விதிக்கப் பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!