கொழும்பு: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை, நாட்டின் எண்ணெய் பற்றாக் குறையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் கட்டாயத்தில் உள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். எண்ணெய் தருவிப்பது குறித்து மற்ற நாடுகளைப் பரிசீலிப்பேன். ஆனால் மாஸ்கோவிடமிருந்து அதிக கச்சா எண்ணெய்யை வாங்கத் தயாராக இருப்பதாக சனிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்த பிரதமர் ரணில் தெரிவித்தார்.
எழுபது ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியில் உணவு, எரிபொருள், மருந்து வாங்குவதற்குக்கூட இலங்கையிடம் நிதி இல்லை.

