வாஷிங்டன்: துப்பாக்கி வன் முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரி நேற்று அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெக்சாஸ் தொடக்கப் பள்ளி யில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் 19 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பிறகு துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புளோரிடாவில் உள்ள பார்க் ேலண்டில் 2018ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த மாணவர் ஒருவர் நிறுவிய 'வாழ்வுக்கான பேரணி' என்ற துப்பாக்கி பாதுகாப்பு அமைப்பு, சனிக் கிழமை அன்று 450க்கும் மேற்பட்ட பேரணிகளுக்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது. நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வாஷிங்டனில் வாஷிங்டன் நினைவுச்சின்னத்துக்கு அருகேயுள்ள தேசிய மண்டபத்தில் தூறலையும் பொருட்படுத்தாமல் 40,000 பேர் திரண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்கும் ஆயுதங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாடாளு மன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் துப்பாக்கிகள் விற்கப் படுவது குறித்து பைடன் நிர்வாகம் ஆேலாசித்து வருகிறது.

