சமரசப் பேச்சு தோல்வி; தென்கொரியாவில் லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

சோல்: தென் கொரி­யா­வில் அர­சாங்­கத்­து­டன் நடை­பெற்ற சம­ர­சப் பேச்­சு­வார்த்தை தோல்வி அடைந்­த­தால் ஆறா­வது நாளாக நேற்று கனரக லாரி ஓட்­டு­நர்­க­ளின் வேலை நிறுத்­தம் தொடர்ந்­தது.

அதிக சம்­ப­ளம் கேட்டு கனரக லாரி ஓட்­டு­நர்­கள் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். இத­னால் நாட்­டின் தொழில்­துறை மற்­றும் துறை­மு­கங்­கள் முடங்­கி­யுள்­ளன.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கனரக லாரி ஓட்­டு­நர் சங்­கத்­தின் மூத்த அதி­காரி ஒரு­வர், பேச்­சு­வார்த்தை தொட­ருமா என்­பது தெரி­ய­வில்லை என்­றார். ஆனால் மீண்­டும் பேச்­சு ­வார்த்தை நடை­பெ­றும் என்று அர சாங்கத் தரப்பில் தெரி­விக்கப் பட்டாலும் அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

புசான் வட்­டா­ரச் சங்­கத்­தின் மூத்த அதி­காரி ஒரு­வர், அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து விவா­திப்­ப­தற்­காக உள்­ளூர் தலை­வர்­கள் இன்று (ஞாயிறு) ஒன்று கூடு­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார்.

பகுதி­மின்­க­டத்தி (semi conductor), திறன்­பேசி, மின்­க­லம், மின்­னி­யல் பொருள்­கள் உள்­ளிட்­ட­வற்றை உலக முழு­வ­தும் விநி­யோ­கிக்­கும் முக்­கிய நாடாக தென் கொரியா இருந்து வரு­கிறது. சீனா­வின் கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளா­லும் உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்­பா­லும் ஏற்­கெ­னவே இடையூறுகள் ஏற்பட்டுள்ள உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கி­லி­கள், இந்த வேலை­ நி­றுத்­தத்­தால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளன. உல­கம் முழு­வ­தும் உள்ள துறை­மு­கங்­களில் கணினிச் சில்­லு­கள், பெட்­ரோ­லிய ரசாயனம், வாக­னங்­க­ளின் விநி­யோ­கம் மெது­வ­டைந்­துள்­ளது. இத­னால் ஆசி­யா­வின் ஆகப்­பெ­ரிய நான்­கா­வது பொரு­ளி­யல் நாடான தென் கொரி­யா­வின் ஏற்று­ ம­திக்­கு மிரட்­டல் ஏற்­பட்­டுள்­ளது.

எரி­பொ­ருள் விலை அதி­க­ரித்து வரு­வ­தற்கு எதி­ரா­க­வும் குைறந்­த­பட்ச உத்­த­ர­வா­த­முள்ள ஊதி­யத்தை வழங்க வேண்­டும் என்­றும் டிரக் ஒட்­டு­நர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

தெற்கு நக­ர­மான உல்­சா­னில் உள்ள ஹுயுண்­டாய் வாகன தொழிற்­சா­லைக்கு முன்பு நேற்று திரண்ட 100க்கும் மேற்­பட்ட கனரக லாரி ஓட்­டு­நர்­கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக முழக்­க­மிட்­ட­னர்.

இந்த நிலை­யில் இன்று மேலும் நூற்றுக்­ க­ணக்­கா­ன­வர்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­பார்­கள் என்று சங்­கத்­தின் அதி­காரி நேற்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!