ஆஸ்திரேலியாவுக்கு மே மாதம் மோசம்; 27 பேர் சளிக்காய்ச்சலுக்கு பலி

கேன்­பரா: ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மே மாதம் மிக மோச­மான மாத­மாக அமைந்­துள்­ளது. அந்த மாதத்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­மா­னோர் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

ஆஸ்­தி­ரே­லியா முழு­வ­தும் மே மாதத்­தில் மொத்­தம் 65,770 பேர் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப் பட்­ட­தாக தேசிய நோய்க் கண் காணிப்பு முறை­யின் புள்ளி விவரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஜூன் 5ஆம் தேதி வரை கணக்­கில் எடுத்­துக் கொண்­டால் 87,989 பேருக்கு சளிக்­காய்ச்­சல் ஏற்­பட்டு உள்­ளது. அவர்­களில் 47,860 பேர், ஏறக்­கு­றைய 54 விழுக்­காட்­டி­னர் குளிர்­கா­லம் தொடங்­கு­வ­தற்கு முன்பே ஜூன் 5க்கு முந்­தைய இரண்டு வாரங்­களில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

"2022ஆம் ஆண்­டின் ஏப்­ரல் மத்­தி­யி­லி­ருந்து உறுதி செய்­யப்­பட்ட வாராந்­திர சளிக்­காய்ச்­ச­லின் எண்­ணிக்கை ஐந்து ஆண்­டு­கால சரா­ச­ரி­யைத் தாண்­டி­விட்­டது," என்று அந்த கண்­கா­ணிப்பு அமைப்பு குறிப்­பிட்­டது.

அது மட்­டு­மல்­லா­மல் 2022ஆம் ஆண்­டில் இது­வரை சளிக்­காய்ச்­சல் தொடர்­பில் 27 மர­ணங்­கள் ஏற்­பட்டு உள்­ளன. 733 சம்­ப­வங்­ க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

அவர்­களில் ஆறு விழுக்­காட்­டி­ன­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!