'உக்ரேன் போர் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும்'

'உக்ரேன் போர் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும்'

2 mins read
81f05247-e66b-4553-876f-52f6658baaab
-

பாரிஸ்: ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடையே நடந்து வரும் போர் இன்­னும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும் என்று ரஷ்­யா­வின் முன்­னாள் பிர­த­ம­ரும் ரஷ்­யா­வின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான காஸ்­யா­னோவ் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ரஷ்­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்த திரு காஸ்­யா­னோவ், நேற்று ஏஎஃப்பி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு காணொளி வாயி­லாக அளித்த பேட்­டி­யில் இவ்­வாறு தெரி­வித்­தார். இரண்டு ஆண்­டு­கள் தொட­ரும் இந்­தப் போருக்­குப் பின் ரஷ்யா மக்­க­ளாட்­சிக்கு மாறும் சூழல் உரு­வா­கக்­கூ­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரேன் மீது தொடங்­கிய படை­யெ­டுப்­புக்கு முன்­னர், ரஷ்ய பாது­காப்பு மன்­றத்­தின் கூட்­டம் நடந்­தது. அப்­போதே போர் மூளப்­போ­கிறது என்­பதை உணர்ந்­தேன்," என்று கூறி­னார் திரு காஸ்­யா­னோவ்.

போரின் பின்­வி­ளை­வு­கள் பற்றி திரு புட்­டின் எண்­ணிப்­பார்க்­கா­மல்­தான் இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளார் என்­றும் திரு காஸ்­யா­னோவ் கூறி­னார்.

திரு காஸ்­யா­னோவ், அதி­பர் புட்­டி­னால் பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட பின் ரஷ்­யா­வின் எதிர்க்­கட்­சி­யில் தன்னை இணைத்­துக்­கொண்­டார். இப்­போது அவர், ரஷ்­யா­வின் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான சுதந்­தி­ரக்­கட்­சிக்­குத் தலைமை வகித்து வரு­கி­றார். இந்­தப் போரில் உக்­ரேன் வீழ்ச்­சி­ய­டைந்­தால், ரஷ்­யா­வின் அடுத்த இலக்கு பால்­டிக் பகு­தி­களாக இருக்­கும் என்­றும் அவர் கூறி­னார். ஆனால், போர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இழு­ப­றி­யாக இருக்­கும் என்று கூறிய திரு காஸ்­யா­னோவ், இறு­தி­யில் உக்­ரேன் வெற்றி பெறு­வது தவிர்க்­க­மு­டி­யா­தது என்று கூறி­யுள்­ளார். போருக்­குப் பின்­னர், ரஷ்யா ஒரு மக்­க­ளாட்­சி­யைக் கொண்ட நாடாக உரு­வா­கும் என்­பது மட்டும் உறுதி என்று திரு காஸ்­யா­னோவ் கூறி­னார்.