தென்கொரியாவில் கனரக வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் சரக்குகள் தேக்கம்: ராணுவம் உதவி

தென்கொரியாவில் கனரக வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் சரக்குகள் தேக்கம்: ராணுவம் உதவி

1 mins read
5ae9ae1a-fe96-4213-aa89-a03596ed5305
-

சோல்: கன­ரக வாக­ன ஓட்­டு­நர்­கள் நாட­ளா­விய வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அத­னால், சரக்குக் கொள்­க­லன்­களை துறை­மு­கங்­க­ளுக்கு ஏற்­றிச் செல்ல வாக­னங்­கள் இல்லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. தென்­கொ­ரி­யா­வின் துறை­முகங்­களில் ஏரா­ள­மான சரக்­குக் கப்­பல்­கள், சரக்­குக் கொள்­க­லன்­களுக்­காக காத்­துக்­கி­டக்­கின்­றன.

இந்­தப் பிரச்­சி­னையை சரிக்­கட்ட, அந்­நாட்டு ராணுவம் தனது கன­ரக வாக­னங்­களை அனுப்­பி­வைத்­துள்­ளது.

ஜூன் 7ஆம் தேதி கன­ரக வாகன ஓட்­டு­நர்­கள் நாடு தழு­விய வேலை நிறுத்­தத்­தைத் தொடங்­கி­னர்.

போராட்­டம் தொடங்கி இன்றுடன் எட்டு நாள்க­ளாகிறது. இந்­தப் போராட்­டத்­தால் நாட்­டில் இரும்பு, மோட்­டார் வாக­னத் தொழிற்­சா­லை­கள், தங்­கள் தயா­ரிப்­பு­களை ஏற்­று­மதி செய்ய முடி­யா­மல் முடங்­கிக்­கி­டக்­கின்­ற­ன.

அத­னால் அந்த தொழிற்­சா­லை­கள் தங்­கள் நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­க­ளைக் குறைத்­துக்­கொண்­டுள்­ளன.

கன­ரக வாகன ஓட்­டு­நர் சங்­கத்­தின் 22,000 பேர், ஓட்­டு­நர்­க­ளுக்கு நிலை­யான அடிப்­ப­டைச் சம்­ப­ளம் நிர்­ண­யிக்­கப்­படும் என்­பது குறித்து அர­சாங்­கத்­தி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

அந்­தப் பேச்­சு­வார்த்தை தோல்வி­ய­டைந்­த­தை அடுத்து அவர்­கள் நாடு தழு­விய வேலை நிறுத்­தத்­தில் இறங்­கி­யுள்­ள­னர்.

இந்த வேலை நிறுத்­தத்­தால் அங்­குள்ள பெரும்­பா­லான வாக­னத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.