பொதுமக்கள் தப்பிச்செல்லும் பாலத்தை ரஷ்யப் படை தகர்த்தது

பொதுமக்கள் தப்பிச்செல்லும் பாலத்தை ரஷ்யப் படை தகர்த்தது

1 mins read
2f62bf59-f4de-42e1-ac08-cf54298c3d8f
-

நியூ­யார்க்: உக்­ரே­னின் சிய­வெ­ரோ­டொ­னெஸ் நக­ரு­டன் அருகே உள்ள நகரை இணைக்­கும் ஒரு பாலத்தை ரஷ்­யப் படை­யினர் குண்டு வீசித் தகர்த்­து­விட்­டனர். அத­னை­ய­டுத்து அந்­ந­க­ரில் உள்ள உக்­ரே­னி­யப் படை­களை விரை­வில் ரஷ்­யப் படை­கள் முற்­று­கை­யி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

மக்­க­ளைப் போரில் இருந்து பாது­காக்க அந்­தப் பாலம் முக்­கிய பாதை­யாக இருந்­தது. இப்­போது அது­வும் தகர்க்­கப்­பட்டு விட்­ட­தா­க­வும் போரில் இருந்து மக்­க­ளைப் பாது­காப்­பது கேள்­விக்­கு­றி­யாகி விட்­டது என்று உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அந்­தப் பகு­தி­யில் தொடர்ந்து கடு­மை­யான சண்டை நடந்து வரு­வ­தாக உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி ஒரு காணொ­ளி­யில் தெரி­வித்­துள்­ளார்.

ரஷ்ய ராணு­வம் டொன்­பாஸ் பகு­திக்கு ராணு­வத்தை அனுப்ப முயன்று வரு­வ­தாக அவர் கூறி­னார்.

உக்­ரே­னின் ஒவ்­வொரு தெரு­வி­லும் ரஷ்­யப் படை­யி­ன­ரு­டன் உக்­ரே­னி­யர்­கள் போராடி வரு­கின்­ற­னர் என்­றும் அவர் கூறி­னார்.

நக­ரத்­தின் பெரும்­பா­லான பகு­தி­களை ரஷ்­யப் படை­கள் கைப்­பற்றி விட்­டன. ஆனால் உக்­ரே­னின் தொழிற்சா­லை­கள் அமைந்­துள்ள பகு­தி­கள் மட்­டும் உக்­ரேன் படை­களின் கட்­டுப்­பாட்­டில் இருந்து வரு­கிறது.

அப்­ப­கு­தி­க­ளில்­தான் நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்­கள் பாது­காப்­பா­கத் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.