அமெரிக்காவின் சிறந்த உணவகமாக இந்திய உணவகம் தேர்ந்தெடுக்கப்பட்டது

அமெரிக்காவின் சிறந்த உணவகமாக இந்திய உணவகம் தேர்ந்தெடுக்கப்பட்டது

1 mins read
7705276a-7dee-4e52-b912-848d74913728
படம்: இணையம் -

அமெரிக்காவில் உள்ள ஓர் இந்திய உணவகம் அந்நாட்டின் சிறந்த உணவகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வட இந்திய வீதி உணவு வகைகளை பரிமாறும் 'சாய் பானி' எனும் உணவகம் வட கரோலினாவில் அமைந்துள்ளது.

இங்கு வட பாவ், பாவ் பஜ்ஜி, கோழி டிக்கா போன்ற சாட் உணவு வகைகள் மிகவும் பிரபலம். இதோடு தாலி உணவு வகையும் இங்கு கிடைக்கிறது.

சாய் என்றால் தேநீர், பானி என்றால் தண்ணீர் என்று இந்தி மொழியில் அர்த்தம். மலிவான, சுவையான, வித்தியாசமான உணவு இங்கு கிடைப்பதாக உணவகம் அதன் இணையப்பக்கத்தில் கூறிகொள்கிறது.

இந்த உணவகத்தில் கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் இந்தியாவில் கிடைக்கும் அசல் வீதி உணவு போன்றே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ருசியில் எந்தவொரு குறையும் இல்லை என்கின்றனர் உணவகத்துக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள். வீட்டில் சமைக்கும் சாப்பாட்டுக்கு நிகராக இங்கு சாப்பாடு இருப்பதாக சிலர் கருதுகின்றனர். மேலும், அனைத்து சாப்பாட்டு வகைகளின் விலை கட்டுப்படியாக இருக்கிறது.

ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை இந்த உணவு விருது நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. 2020, 2021ஆம் ஆண்டுகளில் கிருமித் தொற்று பரவல் காரணமாக விருது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இவ்வாண்டு சிக்காகோவில் நடைபெற்ற உணவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.