அரசு ஊழியர்கள் வேளாண்மையில் ஈடுபட இலங்கை வலியுறுத்து

அரசு ஊழியர்கள் வேளாண்மையில் ஈடுபட இலங்கை வலியுறுத்து

1 mins read
04ee6b7f-0ea8-483a-8652-14954a3707bc
-

கொழும்பு: நாடு நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் நிலை­யில் அர­சுப் பணி­யில் இருப்­போர் ஒவ்­வொரு வார­மும் கூடு­த­லாக ஒரு நாள் விடுப்பு எடுத்­துக்­கொண்டு பயிர் வளர்ப்­பில் ஈடு­பட வேண்­டும் என்று இலங்கை அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

உண­வுப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க அரசு ஊழி­யர்­கள் அவ­ர­வர் வீட்­டுப் பின்­பு­றத்­தில் பயிர்­களை வளர்க்­க­லாம் என்று இலங்கை அமைச்­ச­ரவை அறிக்கை கூறி­யது.

இலங்­கை­யில் கடு­மை­யான உண­வுப் பற்­றாக்­குறை நில­வு­கிறது. எரி­பொ­ருள், மருந்­து­கள் உள்­ளிட்­ட­வற்­றின் விலை உயர்­வும் மக்­களை அவ­திக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கிறது.

இவ்­வே­ளை­யில் கூடு­த­லாக ஒரு நாள் விடுப்பு அளிப்­ப­தால் ஊழி­யர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துச் செல­வும் மிச்­சப்­படும்; எரி­பொ­ருள் தேவை­யும் குறை­யும் என்று கூறப்­பட்­டது.

எனவே அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு அரசு ஊழி­யர்­களுக்கு ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும் ஊதி­யத்­து­டன் கூடி­ய விடுப்பு அளிக்­கப்­படும். அத்­தி­யா­வ­சி­யச் சேவைப் பணி­யா­ளர்­களுக்கு இது பொருந்­தாது.

வெளி­நாடு சென்று வேலை­செய்ய விரும்­பும் அரசு ஊழி­யர்­களுக்கு ஐந்­தாண்டு ஊதி­ய­மில்லா விடுப்பு வழங்­கப்­படும்; அவர்களின் ஓய்வூதியம் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் 1.5 மில்லியன் பேர் அரசுப் பணிகளில் உள்ளனர்.