வெள்ளத்தால் மூடப்பட்ட 'எல்லோஸ்டோன்' இயற்கைப் பூங்கா

வெள்ளத்தால் மூடப்பட்ட 'எல்லோஸ்டோன்' இயற்கைப் பூங்கா

1 mins read
1b55a5db-d78f-43f0-959f-0d4b0314ad7c
-

மோன்­டானா: கடு­மை­யான வெள்­ளம் ஏற்­பட்­ட­தால் புகழ்­பெற்ற சுற்­று­லாத்­த­ல­மான 'எல்­லோஸ்­டோன்' இயற்­கைப் பூங்­காவை அதி­கா­ரி­கள் மூடி­யுள்­ள­னர்.

அந்த வட்­டா­ரத்­தில் பல கட்­ட­டங்­கள் வெள்ள நீரில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. வெள்­ளத்­தி­னால் சாலை­க­ளி­லும் பாலங்­க­ளி­லும் ஏற்­பட்ட பாதிப்பை அதி­கா­ரி­கள் மதிப்­பிட்­டு­வ­ரும் வேளை­யில் பூங்­கா­வின் பல இடங்­களில் மின்­சா­ரம் தடை­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்கு முன்­னர் 1988ஆம் ஆண்டில் காட்­டுத் தீ கார­ண­மாக இந்த இயற்­கைப் பூங்கா பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்­டது. தற்­போது கோடை விடு­மு­றை­யில் சுற்­றுப்­ப­ய­ணி­கள் வரத் தொடங்­கும் வேளை­யில் பூங்கா மூடப்­பட்­டுள்­ளது.

ஐந்து நுழை­வா­யில்­க­ளைக் கொண்ட இயற்­கைப் பூங்­கா­வின் பல்­வேறு பகு­தி­களில் சிக்­கிக்­கொண்­டி­ருக்­கும் வரு­கை­யா­ளர்­களை­யும் ஊழி­யர்­க­ளை­யும் தேடி மீட்­கும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.